பிக்பாஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் இந்த போட்டியாளர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முதல் நாளில் அன்பு மழையாக பொழிந்து குடும்ப பின்னணி பற்றி சொல்லும் போது கண்ணீர் அருவியாக அனைவரின் கண்களிலும் வழிந்தோடியது.

இன்னும் முதல் வார எவிக்‌ஷன் கூட நடந்து முடியவில்லை. அதற்குள் வனிதா மதுமிதா, மீராவை ஆட்டிப்படைத்து வருகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 போட்டியாளர் பாலாஜி பேட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் அவர் பிக்பாஸ் சீசன் 3 பற்றி பேசுகையில் வனிதா பிக்பாஸ் வீட்டிற்கே ஓணர் போல நடந்து கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம்.

வீட்டிலேயே அடங்காதவர் இந்த பிக்பாஸ் வீட்டில் எப்படி அடங்குவீர்கள். பெற்ற அப்பாவையே அவன் இவன் திட்டுகிறார். ஆயிரம் இருக்கட்டும். வனிதா என்றால் யாருக்கு தெரியும். பின்னால் இருக்கும் விஜயகுமார் என்ற பெயரால் தான் எல்லோருக்கும் தெரியும்.

இவர் தான் என பேட்டியில் வனிதா மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.