பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்துள்ளார், நடன பயிற்சியாளர் சாண்டி. வீட்டில் அனைவரையும் தனது நகைச்சுவையான செயல்பாடுகளால் மகிழ்விப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் மட்டுமின்றி மற்றவர்களின் ரசிகர்கள் கூட இவரை ரசிக்கின்றனர்.
அப்படிப்பட்ட இவரது பிறந்தநாள் இன்று(ஜூலை 5) தான். இதன் கொண்டாட்டத்தை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம். மேலும் அவரது பிறந்தநாளிற்கு அவரது மனைவி செல்வியாவும் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், வெளியில் இருப்பது போல் தான் உள்ளேயும் இருக்கிறாய். எதாவது பிரச்சனை என்றால் ஓடி வந்துவிடு. நூறு நாள் இருக்க வேண்டும் என அவசியமில்லை. உன்னை மிகவும் மிஸ் பண்றோம் என கூறியுள்ளார்.