கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த மனைவி, குழந்தைகள்!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒன்றுமே அறியாத தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (37). இவருக்கு சங்கீதா (35) என்கிற மனைவியும், மானஸ்வி (8), யஷ்வி (5) மற்றும் ஓஜாஸ்வி (3) என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.

மது போதைக்கு அடிமையாக இருந்த பிரதீப் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து வந்துள்ளார். இதனை அவருடைய மனைவி சங்கீதா கடுமையாக எதிர்த்து வந்துள்ளார்.

அதோடு அல்லாமல் பிரதீப் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு பிரதீப் குடும்பத்தினர் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு மாதிரியான சத்தம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரதீப்பின் தந்தையும், சகோதரி ரீனா அறையை திறந்து பார்த்த போது ஓரத்தில் பிரதீப் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார்.

பின்னர் இரண்டு பெரும் உறங்க சென்றுவிட்டனர். 10 நிமிடங்கள் கழித்து குழந்தைகள் கதறும் சத்தம் அறையிலிருந்து கேட்டுள்ளது. உடனே இருவரும் அறையை திறக்க முயன்றுள்ளனர். மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என கூறி பிரதீப் அறையை திறக்க மறுத்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அறையிலிருந்து எந்த சத்தமும் இல்லத்தில் அமைதியாக இருந்தது. இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்த போது, சத்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக அனைவரின் வாயிலும் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.

பலத்த காயங்களுடன் சங்கீதா மற்றும் அவருடைய கடைசி மகள் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருத்துள்ளனர். இதனையடுத்து அவர்களை வேகமாக மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கடிதம் ஒன்றினை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.