அரசு அதிகாரியின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு….

ரஷ்ய அதிகாரத்துவத்தில் ஒரு அரசு ஊழியராக பணிபுரிந்து வரும் இளம்பெண்ணின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியானதால் அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய எண்ணெய் தலைநகரான டியூமனைச் சேர்ந்த அண்ணா அனுஃப்ரீவா (27) அரசாங்கத்தின் இரகசிய கொள்முதல் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆன்லைன் போட்டியின் மூலம் 2019ம் ஆண்டிற்கான பிளேபாய் பத்திரிகையின் மாஸ்கோ பதிப்பில் இணைந்த அவர், வருடாந்திர காலெண்டருக்கு போஸ் கொடுக்கும் உரிமையை வெல்வார் என்ற நம்பிக்கையில், நிர்வாணா போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், புதின் அரசாங்கம் அவரை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் அண்ணா, தன்னை பதிவியிலிருந்து யாரும் நீக்கவில்லை என்றும், தானாகவே வேலையிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.