தெரசாவை விட 10 மடங்கு அதிக பணம் சம்பாதிக்கும் மொடல் அழகி!

அமெரிக்க மொடல் அழகி அபிகாயில் ராட்ச்போர்டு வருடத்திற்கு, பிரித்தானிய பிரதமர் தெரசாவை விட 10 மடங்கு அதிக பணம் சம்பாதிக்கிறார்.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஒரு நாட்டையே நிர்வகிக்க வருடத்திற்கு 150,402 டொலர்கள் சம்பளமாக வாங்குகிறார்.

ஆனால் அமெரிக்க மொடல் அழகி அபிகாயில் ராட்ச்போர்டு (27), சமூகவலைதளங்களின் வாயிலாக மட்டும் வருடத்திற்கு 720,000 டொலர்கள் வரை சம்பாதிக்கிறார். இது தெரசாவை விட 10 மடங்கு அதிக பணம் ஆகும்.

அபிகாயில் இப்போது தனது அனுபவத்தைப் பயன்படுத்தி மற்றவர்களையும் தங்கள் சமூக ஊடக கணக்குகளின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க ஊக்குவிக்க விரும்புகிறார்.

அபிகாயில் ஒருநாளும் மொடலாக வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால் ஒருமுறை தற்செயலாக எடுத்த போட்டோஷூட் அவரை பல நிறுவனங்களுடன் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியது. அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அப்போது தன்னால் தனியாக புகைப்படம் எடுத்து சம்பாதிக்க முடியும் என நினைத்து படங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதன்பிறகு ஸ்குவேர், மாக்சிம், பிளேபாய் மற்றும் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் உள்ளிட்ட பத்திரிகைகள் அவரை புகைப்படம் எடுக்க விரும்பின.

பல அட்டைப்படங்களில் துவங்கி தொலைக்காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார். இதற்கிடையில், சமூக ஊடக ஆர்வலரான அபிகாயில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் இணையதள பக்கத்தில் அதிக படங்களை வெளியிட்டு சம்பாதிக்க துவங்கினார்.

தன்னை அனைவரும் இன்ஸ்டாகிராம் மொடல் அழகி என முத்திரை குத்துவதற்கு பதிலாக தான் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறுமாறு வலியுறுத்துகிறார்.