திருகோணமலைக்கு அப்பால், வங்காள விரிகுடாவில் நேற்றிரவு 10.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
றிச்டர் அளவுகோலில், 5.2 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், வங்காள விரிகுடாவில், திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.