சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியாவை கவர்ந்தவர். இவர் இதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார்.
இதனால், எப்போது தமிழ் சினிமாவிற்கு வருவார் என ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால், தமிழ் சினிமா இவருக்கு தெலுங்கு, மலையாளம் அளவிற்கு வரவேற்கவில்லை என்பதே உண்மை.
இவர் தமிழில் நடித்த தியா, மாரி2, என்ஜிகே ஆகிய மூன்று படங்களும் தோல்வியை தான் சந்தித்துள்ளது.
அதே நேரத்தில் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.
இதனால், தமிழ் சினிமா பக்கம் இனி வருவாரா? என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.