முடி ரொம்ப கொட்டுதா? டிப்ஸ்

இன்றைய காலத்தில் கூந்தல் உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துவருகிறது.

அழகு என்ற பெயரில் கூந்தலை அயர்ன் பண்ணுவது, கேர்ல்ஸ் பண்ணுவது, இப்படி பல வகையில் கூந்தலை கண்ட மாதிரி அழகுப்படுத்துவதனால் கூட கூந்தல் உதிர்வை ஏற்படுத்தி விடுகின்றது.

கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பாருங்கள்.

  • ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும்.
  • வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
  • வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.
  • பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.
  • பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
  • தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.
  • அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.
  • உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.
  • கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
  • தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.