மகனின் பெயர் சூட்டு விழா படத்தை வெளியிட்ட ஹரி – மேகன்

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி தங்களுடைய மகனின் பெயர் சூட்டு விழா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய அரச தம்பதி ஹரி – மேகன் தங்களுடைய ஃபிராக்மோர் வீட்டை புதுப்பிப்பதற்காக பொதுமக்களின் 2.4 மில்லியன் டாலர் பணத்தை செலவு செய்ததால் கடும் எதிர்வினையை சம்பாதித்தனர்.

அதனை தொடர்ந்து குட்டி இளவரசரின் புகைப்படத்தை வெளியிடாமல், அரச மரபை மீறி தனிப்பட்ட முறையில் பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்ததாலும், பொதுமக்கள் விமர்சிக்க துவங்கினர்.

இந்த நிலையில் குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயர் சூட்டு விழா ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படத்தினை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரச தம்பதியினர், “இந்த நாளின் மகிழ்ச்சியை பொது உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், ஆதரவாளர்களின் கருணைக்கு மிகவும் நன்றி” என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த படத்தில் இளவரசர் சார்லஸ், இளவரசி கமிலா, இளவரசர் வில்லியம் – கேட், இளவரசி டயானாவின் சகோதரிகள் மற்றும் மேகனின் தாய் டோரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.