காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதி பொலிஸாரின் பிடியில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போனார்.
அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் சிபிசிஐடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் தகவல் வெளியிட்டிருந்தார். இந்த தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸாரின் பிடியில் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.