ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் தாய்க்கு சரமாரி கத்திக்குத்து!

வடக்கு லண்டன் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் மற்றும் தாய் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு லண்டனின் என்பீல்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் 30 வயதுள்ள ஒரு தாய் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 11 வயது குழந்தை மட்டும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

44 வயதுள்ள நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் ரேடியோவில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த போது. ஒரு பெண் தொடர்ந்து நான்கு முறை அலறும் சத்தம் கேட்டது.

உடனே ரேடியோவை ஆப் செய்துவிட்டு வெளியில் எட்டிப்பார்த்தேன். ஒரு சிறுவன் மட்டும் பால்கனியில் இருந் வேகமாக உள்ளே ஓடினான். அவர்கள் அனைவரும் பலத்த காயங்களுடன் மோசமாக கிடந்தனர் என தெரிவித்துள்ளார்.