முகிலனை பார்க்க வந்த மனைவிக்கு ஏற்பட்ட சோகம்!!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் முகிலன். இவர், கடந்த பிப்.14-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல பரபரப்பு தகவல்களை அளித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு தொடர்பே இல்லை என்றும், காவல்துறை உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். ஆதாரங்களை வெளியிட்ட அவர், இதனை வெளியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என பேசியிருந்தார்.

இதனையடுத்து, கடந்த ​பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு சென்ற முகிலன் திடீரென காணாமல் போனார் . இதை தொடர்ந்து முகிலனை மீட்கவேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் செய்து வந்தனர்.

முகிலன் காணாமல் போன வழக்கை எழும்பூர் ரயில்வே போலீசாரும் , தமிழக காவல்துறையும் விசாரித்து வந்தது, வழக்கில் ஏதும் முன்னேற்றம் ஏற்படாத‌தால், முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் மூன்று ஆந்திரா மாநில காவலர்கள் அழைத்து செல்வது போன்ற காட்சிகள் நேற்றிரவு சமூக வலைதளத்தில் வெளியானது. பின்னர் ஆந்திரா போலீசார் முகிலனை கைது செய்தது உறுதி செய்யப்பட்டது , இதை தொடர்ந்து முகிலனை தங்களிடம் ஒப்புடைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆந்திரா காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனை, ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட முகிலனை சந்திப்பதற்காக சென்னை வந்த அவரது மனைவி பூங்கொடி கள்ளக்குறிச்சி அருகே வந்த போது கார் டயர் வெடித்து விபத்தில் சிக்கினார் லேசான காயத்துடன் பூங்கொடி, மருத்துவமனையில் அனுமதி.