இந்திய வம்சாவளி பெண்… இன வெறித்தாக்குதலுக்கு உள்ளான சோகம்!

ஸ்காட்லாண்ட் காவல்துறையில் பணிபுரியும் இந்திய வம்சாவெளி பெண் மீது பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

Parm Sandhu என்ற 54வயதுடைய இந்திய வம்சாவெளி பெண் 1989ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாண்ட் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். அந்நாட்டு காவல்துறையில் வெள்ளையர் அல்லாத இவர், தற்காலிக தலைமை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Parm sandhu, இங்கிலாந்து ராணியின் காவல்துறை பதக்கத்தைப் பெறுவதற்காக சட்டத்தை மீறி செயல்பட்டதாக சமீபத்தில் இவர் மீது தவறாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றம் உண்மையல்ல என நிரூபித்த பிறகு தற்போது, காவல்துறையில் தனக்கு இன ரீதியிலான பாகுபாடு நிகழ்வதாக புகார் அளித்துள்ளார்.

இந்திய வம்சாவளி கருப்பினத்தவரான Parm sandhu இன ரீதியாக கடும் தாக்கபடுவதாகவும், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்நாட்டு விதிகளின்படி காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு பதக்கம் வழங்குவது தொடர்பாக பிற காவலர்களிடம் தன்னை பரிந்துரைக்கக் கூறியோ, அதில் பங்களிக்கவோ, பதக்கத்தின் நிலை பற்றி அறிந்துகொள்ளவோ முயற்சி செய்யக் கூடாது. ஆனால் sandhu , இங்கிலாந்து ராணி காவல்துறை பதக்கத்துக்காக சக காவலர்கள் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டிலும் உள்நோக்கம் உள்ளதாக sandhu தெரிவித்துள்ளார்.