பிரித்தானியாவில் லொட்டரி பரிசு மூலம் கோடீஸ்வரியான பெண், சாதாரண சம்பளத்தில் செய்யும் தனது வேலையை ராஜினாமா செய்யாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ருத் பிரீன் என்ற பெண் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் வாங்கிய லொட்டரி சீட்டில் அவருக்கு £1 மில்லியன் பரிசு விழுந்தது.
தற்போது பரிசு பணத்தின் மூலம் வசதியாக அவர் வாழ்ந்து வந்தாலும் தனது அலுவலக பணியை ராஜினாமா செய்யாமல் உள்ளார்.
இந்நிலையில் தனக்கு பரிசு விழுந்த தருணம் குறித்தும், கோடீஸ்வரியாகியும் ஏன் இன்னும் வேலைக்கு செல்கிறார் என்பது குறித்தும் ருத் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், லொட்டரி டிக்கெட் வாங்கியவுடன் அது குறித்து நான் பெரிதாக நினைக்கவில்லை. இந்த நிலையில் தான் என் கணினிக்கு மெயில் வந்தது.
ஆனால் எதாவது விளம்பரம் தொடர்பான மெயிலாக இருக்கும் என அதை நான் உடனடியாக பார்க்கவில்லை.
பின்னர் சில மணி நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்தபடியே மெயிலை பார்த்த போது எனக்கு லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.
இதை முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. பண விடயத்தில் நமக்கு இனி பிரச்சனையே இல்லை என ஒரு உணர்வு வரும் இல்லையா? அது தான் உலகிலேயே சிறந்த உணர்வாக நான் கருதுகிறேன்.
இதன்பின்னர் லொட்டரி நிறுவனம் அவர்களின் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு பரிசு பணத்தை எனக்கு கொடுத்தனர்.
பரிசு பணத்தை வைத்து என் மகளை நல்ல பள்ளியில் சேர்த்துள்ளேன், என் சகோதரர் வீடு வாங்க உதவினேன், என் பெற்றோர் வைத்திருந்த அடமான கடனையும் அடைத்தேன்.
எனக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்தும் நான் எனது வேலையை இன்னும் விடவில்லை, ஆனால் என் அலுவலக நேரத்தை மட்டும் குறைத்து கொண்டேன்.
ஏனெனில் எனக்கு 35 வயது என்கிற போது அது வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயது கிடையாது என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
அதிகளவு பணம் நிச்சயமாக மகிழ்ச்சியை வாங்கி தராது, ஆனால் நமக்குள்ள மகிழ்ச்சியை அது அதிகப்படுத்தும்.
தற்போதும் லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கத்தை வைத்துள்ளேன், இதற்கு முக்கிய காரணம் உள்ளது.
அதாவது லொட்டரி சீட்டுகள் மூலம் வாரம் £30 மில்லியன் பணம் சேகரிக்கப்பட்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது தான் நான் லொட்டரியை தொடர்ந்து விளையாட முக்கிய காரணம் என கூறியுள்ளார்.