எம்பி பதவியை பறிகொடுக்கப்போகும் கனிமொழி….!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக சேர்ப்பில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை சௌந்தரராஜனை வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக எம்பி கனிமொழி பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெற்றதாக தமிழிசை சௌந்தராஜன் தேர்தல் நடந்தபோது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.