இந்திய அணிக்கு மோடி போட்ட அதிரடி உத்தரவு!

இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசு தான் காரணம் என பாகிஸ்தான் கிரிக்கெட் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் முகமது ஷமி மற்றும் சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதில் புவனேஷ் குமார் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்தனர்.

இந்திய அணியில் நடந்த மாற்றம் குறித்த பாகிஸ்தான் தேசிய ஊடகம் ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, நானாக இருந்தால் கண்டிப்பாக ஷமிக்கு ஓய்வு அளித்திருக்க மாட்டேன்.

மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமிக்கு தீடீரென ஏன் ஓய்வு அளிக்கப்பட்டது. ஒரு சாதனை படைக்க வாய்ப்புள்ளது. மேலும், அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

அவருக்கு ஏன் ஓய்வு அளிக்கப்பட்டது என என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஷமிக்கு ஓய்வு அளிக்கும் படி அணிக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கும் என நன் நினைக்கிறேன். முஸ்லிம்களை முன்னேற்ற அனுமதிக்காத பாஜகவின் நலைப்பாடே ஷமிக்கு ஓய்வு அளிக்கப்ட்டதற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

எனினும், ஜூலை 9ம் திகதி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.