இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பெற்ற இந்திய அணி, இரண்டாம் இடத்தை பெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்து அணி, நான்காம் இடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய – நியூசிலாந்து மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிறது. இந்தப் போட்டியில் வென்று இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இலங்கை போட்டியின் போது ஒய்வு அளிக்கப்பட்ட முகமது ஷமி, சஹால் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ் குமார் ஆகிய இருவரும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் புவனேஷ் குமார் 72 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் எடுத்து இருந்தார். இன்று போட்டி நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக இருப்பதால் இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்பதால் ஜடேஜா அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.