டிக்டொக் செயலி மூலம் 16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..!!

டிக்டாக் வீடியோ மூலம் 16 வயது சிறுவனை கடத்தி சென்று உல்லாச வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றுள்ளார் தாதி ஒருவர்.தேனியை சேர்ந்த 16 வயதுடைய தீபக் என்ற சிறுவன் சென்னையில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளான். இவனது அப்பா துபாயில் இறால் வியாபாரம் செய்து வருகிறார். சின்ன வயதுப் பையன் என்பதால், டிக் டாக் ஆப் மீது உள்ள மோகத்தால் நிறைய டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வந்திருக்கிறான்.அப்போதுதான் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு தாதி பழக்கமாகி உள்ளார். சிறுவனை விட 7 வயசது பெரியவர். டிக்டாக்கில் டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, லவ் டயலாக் பேசுவது என்று ஆரம்பித்து. இருவரும் செக்ஸ் சாட் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாசம் அந்த பையன் காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் கிண்டி போலீசில் புகார் கொடுத்தனர்.இந்நிலையில் அந்தச் சிறுவனின் தந்தை ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு பிறகு, விரைவில் சிறுவனை கண்டுபிடிக்கிறோம் என்று நீதிமன்றில் நேரம் வாங்கியது போலீஸ். ஆனால் போலீஸ் தரப்பில் சுணக்கம் காட்டகடுப்பான அந்த பையனின் தந்தை மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் கடுப்பான நீதிபதியை கண்டிக்கவும்தான், போலீஸ் களத்தில் இறங்கியது.சிறுவனின் போனை ட்ரேஸ் செய்ததில், திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குழி என்ற இடத்தில் சிக்னல் கிடைத்தது. இதைவைத்து போலீஸார் அடுத்தடுத்த விசாரணையில் இறங்கியபோதுதான் விவகாரம் தெரிய வந்துள்ளது. அந்த பெண் கையில் குழந்தை இருப்பதை கண்டு பயங்கர ஷாக்.சிறுவனை கடத்தியது குறித்து அவர்கள் கேட்டதற்கு, எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அதனால பிடிக்காம சென்னைக்கு ஓடிவந்துட்டேன். அந்த சமயத்தில் நானும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு பிறந்த குழந்தை இதுதான் என்று சொல்லி குழந்தையை எடுத்துக் காட்டி உள்ளார்.பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 18 வயது பூர்த்தி அடையாதவனை கல்யாணம் செய்து கொண்டதால், அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.ஆனால் கைக்குழந்தையின் பொது நலன் கருதி தாயுடன் காப்பகத்தில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குழந்தையின் பாதுகாப்புக்காக 5 லட்சம் ரூபா வைப்புச் செய்ய வேண்டும் என்று சிறுவனை காப்பகத்துக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.