இந்திய அணியின் கேப்டனும் ‘ரன் மெஷின்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசிய போதிலும், ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை. அதே சமயத்தில் துணைக் கேப்டனான ரோகித் சர்மா இதுவரை ஐந்து சதங்கள் விளாசியுள்ளார்.
ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி, இந்த உலகக்கோப்பையில் என்னுடைய ரோலே மாறுபட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும், கோலி கூறுகையில் ‘‘இந்த உலகக்கோப்பையில் நான் வேறு வித ரோலில் விளையாடி வருகிறேன். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் நான், எந்தவிதமான ரோலாக இருந்தாலும் அணிக்கு அது தேவையென்றால் அதை நான் செய்தே ஆக வேண்டும்.தொடர்ச்சியாக ரோகித் சர்மா சதம் அடித்து வருவது எனக்கு மிக மிக சந்தோஷம்.
ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை சுமார் 20 ஓவர்களுக்குப் பின் மாறுபட்ட ரோலில் விளையாட வேண்டும். மிடில் ஓவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு , கேதர் ஜாதவ், எம்எஸ் டோனி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை அதிரடியாக விளையாட வைக்க வேண்டும். தற்போது அணியில் ரிஷப் இடம் பிடித்து அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நான் இந்த உலககோப்பை போட்டியில் செய்து கொண்டிருக்கும் ரோல், ஒருநாள் போட்டியில் மாறுபட்டது என்பதை புரிந்து கொண்டேன். மேலும், ஆட்டத்தின் சூழ்நிலை எவ்வாறு போகிறதோ, அதற்கு தகுந்தது போல பேட்டிங் செய்ய வேண்டும். ஒரு பக்கம் நானும் நிலைத்து நின்று மறுபக்கத்தில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட் 150, 160 அல்லது 200 ஆக இருக்கும்போது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. அணிக்கு தேவை என்றால் மறுபக்கத்தில் நான் எனது அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்துவேன், இந்த உலகக்கோப்பையில் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியதின் மூலம்நான் அதிக விஷயங்களை கற்றுக் கொண்டேன். இதுதான் நமது ரோல் என்பதால், அதற்கு எற்படி விளையாட வேண்டும், ரன்கள் அடித்து அணிக்கு பங்களிப்பதே முக்கியம் என்றும் சுய சாதனைக்காக விளையாட முடியாது என விராட் கோலி தெரிவித்தார்.