இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பெற்ற இந்திய அணி, இரண்டாம் இடத்தை பெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்து அணி, நான்காம் இடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய – நியூசிலாந்து மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிறது. இந்தப் போட்டியில் வென்று இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த அரையிறுதிப் போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வெட்டோரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, நியூசிலாந்து அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சில் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.
இந்த போட்டியில் கட்டாயமாகப் மிரட்டலாக பும்ரா விளையாடுவர். தொடக்கத்திலேயே துல்லியமாக பந்துவீசி ரோகித், விராட் கோலி
இருவரையும் தொடக்கத்திலே வீழ்த்தி நெருக்கடி கொடுக்கவேண்டும். இந்திய அணி ஆரம்பித்திலேயே மெதுவாக விளையாடுவதாக கூறுகிறார்கள்.
உண்மையிலேயே அவர்களை தொடக்கத்திலே நிலைத்து நின்று விட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளார்.