தந்தை பேச்சை கேட்காமல் மனைவியுடன் சென்ற மகன்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 29 நபர்களில் ஒருவர் தான் 29 வயதான மின்சார பொறியியலாளர் ஆசாத்பூரைச் சேர்ந்த ஹசூர் ஆலம். அவர், தனது மனைவி ஷாகுஃப்தாவை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் விட்டு, பேருந்தில் டெல்லி திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆலம் குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது, ஆலம் பேருந்தில் அரிதாகவே பயணம் செய்வார். மேலும், அவரது சில பேருந்து பயணங்களில் ஒன்று அவரது வாழ்க்கையின் கடைசி பயணமாக மாறிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆலமின் குடும்ப உறுப்பினர்கள், லக்னோவில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு தனது மனைவி ஷாகுஃப்தாவை விட அனுமதித்ததற்கு இப்போது வருத்தப்படுகிறார்கள்.

என் மகன் வழக்கமாக ரயில் பயணங்களையே விரும்புவான். அவர் பணிபுரிந்த சூரிய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் அலுவலகம் எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தூரத்தில் உள்ள கிரீன் பூங்காவில் இருந்தது. ஆலம் எப்போதும் மெட்ரோவில் பயணம் செய்தார். அவர் பேருந்துகள் அல்லது பைக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார் என்று ஆலமின் தந்தை மன்சூர் அலி கூறினார்.

நான் ஆலமிடம் என் இளைய மகன் சதாம் உசேன் உடன் மனைவியை அனுப்பும்படி சொன்னேன், அல்லது அவனுடைய மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அவளுடன் லக்னோவுக்குச் செல்லும்படி கேட்டேன். ஆனால் இந்த முறை அவர் தனது மனைவியை வேறொருவருடன் அனுப்ப தயங்கினார். இன்று, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்று அவரை கட்டாயப்படுத்தாததற்கு வருத்தப்படுகிறேன் என்று அலி கூறினார்.

ஐந்து உடன்பிறப்புகளில் மூத்தவரான ஆலம் அவரது குடும்பத்தின் முக்கிய வருவாய் உறுப்பினராகவும் இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டில் வடமேற்கு டெல்லியில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் மின் பொறியியல் முடித்தார். ஆலம்-ஷாகுஃப்தாவுக்கு நவம்பர் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.