இலங்கையில் இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கூறுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகமொன்றுக்கான மாறாத கொள்கையொன்றை தயாரிக்கும் தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஐந்தாவது மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டில் சுதேச முஸ்லிம்கள் உள்ளதுடன், பாரம்பரிய மற்றும் நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் இவர்கள் அனைவரும் இந்த வஹாப் வாதம் குறித்து அறிந்தவர்கள் அல்லர்.
இதனால், இந்த நாட்டிலுள்ள 20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாதே. ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடன் மிக விரைவில் கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறில்லாவிடின், நாம் உயிரை இழக்கும் நிலைக்குச் செல்வோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள அரசாங்கமொன்றை அமைமக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை.
இந்த நாட்டுக்கு ஒரேயொரு மாற்று வழியே உள்ளது எனவும் அது சிங்கள அரசாங்கமொன்றையும் சிங்களத் தலைவர் ஒருவரையும் நியமிப்பதாகும்.
சிங்கள அரசாங்கமொன்றை அமைத்து அதன் ஊடாகவே தீர்வுகளை எட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.