கர்நாடக மாநிலத்தில் உள்ள புறநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டபளப்புறா பகுதியை சார்ந்த இடத்தில் பயங்கரவாதியாக இருந்து யாருக்கும் சந்தேகம் வராமல் வாழ்ந்து வந்த ரகுமான் (வயது 30) என்பவனை கடந்த ஜூன் மாதத்தின் 25 ஆம் தேதியன்று தேசிய புலனாய்வு காவல் துறையினர் கைது செய்த நிலையில்., வங்காளதேசத்தை சார்ந்த ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிற்கும் – இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுமட்டுமல்லாது கடந்த 2014 ஆம் வருடத்தின் போது வங்காளதேசத்தில் உள்ள இல்லத்தில் வெடிவிபத்து நடைபெற்ற நிலையில்., வெடிபொருட்கள் தயாரித்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வெடித்ததில் இருவர் உயிரிழக்க., ஒருவர் மட்டும் படுகாயமடைந்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த அமைப்பை சார்ந்த நபர் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து ரகுமானை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., ராம்நகர் மாவட்டத்தில் உள்ள திபுனகர் பகுதியில் உள்ள கால்வாயில் அதிகாரிகள் சோதனை செய்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் செய்த சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியப்பட்டது.
ரகுமானிடம் மேலும் பல தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில்., மேற்படி விசாரணைக்காக வங்காளதேசம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். வங்காள தேசத்திற்கு சென்ற பின்னர் பெங்களூரில் வெடிகுண்டுகள் பதுக்கிவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக பெங்களூருக்கு விரைந்து செய்த சோதனையில்., வெடிபொருட்கள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளது.
ரகுமானுடன் இருந்த இரண்டு கூட்டாளிகளையும் கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாது பெங்களூரில் நாச வேலை செய்ய திட்டமிட்டனரா? என்பது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்