தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்வதாக நாடகமாடி வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு விசித்திரமான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
காரைக்குடியை சேர்ந்த பெண் கார்த்திகா. இவர் கடந்த மாதம் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
அதில் அழுதுகொண்டே பேசிய அவர், நான் தற்கொலை செய்ய போகிறேன்.
இதற்கு காரணம் நான் பணியாற்றும் கடையில் உள்ள நான்கு பேர் தான்.
அங்கு எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள், இதன் காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டது, நான் பொய் சொல்லி தண்ணீர் குடித்து ஏமாற்றுவேன் என நினைப்பீர்கள், ஆனால் பாருங்கள் என கூறியவாறே தாம் தற்கொலை செய்வதாக விஷம் அருந்தும் வீடியோ காட்சியை வெளியிட்டார்.
மேலும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் எனவும் கூறியிருந்தார்.
இதனைக் கண்ட காவல் துறை எஸ்.ஐ. தினேஷ் கார்த்திகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால் கார்த்திகா சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வீடியோ காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , கார்த்திகா அரசு மருத்துவமனையில் ஒருமாத காலத்திற்கு தினமும் சென்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.