டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் போதை பழக்கத்துக்கு அடிமையான இந்தியரை காதலித்து மணந்த நிலையில் கணவருக்கு சிகிச்சையளித்து அவரை நல்லநிலைக்கு மாற்றியுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்தவர் நடாசா நடாலி. இளம்பெண்ணான இவருக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மல்கித் சிங் என்பவருடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள், அந்த சமயத்தில் தான், போதை மருந்து அடிமையானவர் என்றும், எந்த வேலையும் தனக்கு கிடையாது என்றும் மல்கித் நடாலியிடம் கூறினார்.
மேலும் தனது தாயுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தான் போதை பழக்கத்துக்கு அடிமையானதாகவும் கூறினார்.
இதையடுத்து மல்கித்தின் நேர்மையும், கள்ளங்கபடமற்ற குணமும் நடாலியை ஈர்த்த நிலையில் அவர் இந்தியாவுக்கு வந்து மல்கித்தை சந்தித்தார்.
பின்னர் இருவரும் காதல்வயப்பட்ட நிலையில் தனது பெற்றோர் சம்மதத்துடன் மல்கித்தை நடாலி மணந்தார்.
அதை தொடர்ந்து போதை பழக்கத்தில் இருந்து விடுபடும் சிகிச்சையை மல்கித் பெற நடாலி ஏற்பாடு செய்தார்.
நடாலி கூறுகையில், சொந்த நாட்டில், மனதுக்கு நெருக்கமான சூழலில் மல்கித் சிகிச்சை பெறவேண்டும் என விரும்பினேன்.
அதன்படியே சிகிச்சை பெற்று அவர் குணமாகிவிட்டார். அடுத்த வாரம் டென்மார்க் விசாவுக்கு மல்கித் விண்ணப்பிக்கவுள்ளார்.
அதை தொடர்ந்து என்னுடன் அவர் டென்மார்குக்கு வந்து செட்டில் ஆகிவிடுவார். அங்கு அவருக்கு கார் கேரேஜ் தொழில் தொடங்க என் குடும்பத்தார் உதவி செய்யவுள்ளனர் என கூறியுள்ளனர்.