பாகிஸ்தானில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் பல்லி விழுந்த பாலை குடித்ததில் உயிரிழந்த நிலையில் புதுமாப்பிள்ளை உயிருக்கு போராடி வருகிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் சதாம் ஹுசேன். இவருக்கும் சைமா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றிரவு தங்கள் வீட்டு படுக்கையறையில் இருந்தபடி இருவரும் பால் குடித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அறைக்கு வந்த குடும்பத்தார் சதாமும், சைமாவும் மயங்கி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு சைமா உயிரிழந்த நிலையில், சதாமுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சம்பவம் இடத்துக்கு பொலிசார் வந்து விசாரித்த போது தம்பதி பால் குடித்த பாத்திரத்தில் இறந்த பல்லி இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் நடந்த இஸ்லாமாபாத்தின் ஜங்கி சைதீன் பகுதியில் விநியோகிக்கப்படும் 70 சதவீத பால் குடிப்பதற்கு தகுதியற்றவை என சமீபத்தில் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.