தந்தையுடன் ஈழத்துப்பெண் லொஸ்லியா?…

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்ப்பு கிடைத்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே இரண்டாவது சீசனில் முதல் சீசனில் நடந்த கலவரத்தால் பெரிய அளவில் யாரும் உண்மையாக இருக்கவில்லை. பலர் 100 நாட்களும் போலியாக இருந்ததாகவே நமக்கு தெரிந்தது.

இந்நிலையில் 3வது சீசன் துவங்கி சுமார் 4-5 நாட்களிலேயே வீட்டில் பூகம்பங்கள் வெடிக்க துவங்கியது. வீட்டில் உள்ளவர்கள் கேமராவை மறந்து சண்டைகள் போட துவங்கிவிட்டனர். ஆதனால் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்பட துவங்கிய நிலையில் மக்களுக்கு மிகவும் பிடித்த குணமாகிவிட்டது லாஸ்லியாவின் குணம் தான்.

முதல் சீசனில் எப்படி ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளர் சேர்ந்ததோ அதே போன்ற பட்டாளம் தான் தற்போது லாஸ்லியாவிற்கும் சேர்ந்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. தற்போது லொஸ்லியா ஆர்மியில் அவர் பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தந்தையுடன் லொஸ்லியா என்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. 10 ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து சோகத்தில் தவிக்கும் லொஸ்லியாவின் தந்தை உண்மையிலேயே இவர்தானா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகின்றது.

ஆனால் இப்புகைப்படத்தில் உள்ளவர் லொஸ்லியாவின் தந்தை இல்லை என்றும், இவரது பெயர் Kandeepan என்பதும், ரிவி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த புகைப்படத்தினை லொஸ்லியாவின் தந்தை என்று தவறாக கூறியவர்களுக்கு லொஸ்லியா ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.