கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் அரையிறுதிப் போட்டியில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும்,
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் சேர்த்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 191 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டி அபார வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணித் தலைவரான கேன் வில்லியம்சனின் விக்கெட்டை விராட் கோஹ்லி வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு 12 ஆண்டுகள் கழித்து கேன் வில்லயம்சனிற்கு நடப்பு உலகக் கிண்ணம் தொடரின் அரை இறுதிப் போட்டி மூலம் கிடைத்தது.
இந்தப் போட்டியிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 211 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் அடுத்த நாள் தொடரம் என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் பழைய வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
இருப்பினும் இந்தப் போட்டியில் இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ஓட்டங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதன் மூலம் 12 வருடங்களுக்கு முன்பு அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு வில்லயம்சன் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி உலகக் கிண்ணம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.