ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட சிரியா நாட்டிற்கு ராணுவ வீரர்களை அனுப்ப பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட அமெரிக்கா தனது ராணுவ படையை அனுப்பி வைத்தது. சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த சண்டையில், ஓரளவு வெற்றி கிடைத்த கிடைத்ததால் தங்கள் நாட்டு படைகள் வெளியேறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள பயங்கரவாதிகளுடன் போரிட ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் ஆலோசித்து வந்தன.
இந்நிலையில், தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களை சிரியாவுக்கு அனுப்ப பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இரு நாடுகளும் சுமார் 10 முதல் 15 சதவித வீரர்களை அனுப்ப சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மையில் எவ்வளவு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர் என்பது ரகசியமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வீரர்களை அனுப்புவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை ஜேர்மனி நிராகரித்தது.
மேலும், பிரித்தானியா மற்றும் பிரான்ஸுடன் இதில் இணைவதற்கு இத்தாலி ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.