யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பனாமா காட்டில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கிய நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
உயிரிழந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இதுகுறித்த உண்மையை தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் தகவல் பரப்பி வருகின்றனர்.
தாயகத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதி பத்து வருடங்களைக் கடந்துள்ள நிலையில். எமது சமூகம் தமது அரசியல் பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அன்றி பொருளாதார காரணங்களுக்காகவோ பாதுகாப்பற்ற சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.