பிக் பாஸில் இன்று கமல்ஹாசனை கொண்டாடும் இலங்கையர்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகின்றோம்.
1980ஆம் ஆண்டுகளில் ஆரம்பம். கமல் சினிமாவில் உச்சத்திற்கு போயிருந்தக் காலம். அப்போது இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குச் சுற்றுலா போயிருந்த எம்மவர் சிலர் சில நடிகர்களை சந்தித்து படம் எடுத்து விட்டு கமல்ஹாசனையும் சந்திக்க அவரது வீட்டிற்கு போயிருக்கிறார்கள்.
வாசலில் நின்ற காவலாளி உள்ளே விடவில்லை. சத்தம் கேட்டு வெளியே வந்த கமல் “என்ன பிரச்சினை என்று கேட்டிருக்கின்றார்?” சிலோன்காரர்கள் உங்களை பார்க்கணுமாம், படம் எடுக்கணுமாம், அடம்பிடிக்கிறார்கள்” என்றிருக்கிறார்.
“சிலோன் கார நாய்களா? அவர்களை உள்ளே விட வேண்டாம். அடித்து துரத்தி விடு” என்று விட்டு உள்ளே போய் விடவே அவர் சொன்னதை கேட்டு பார்க்க போயிருந்தவர்களில் கோபமடைந்த ஒருவர் கல்லை எடுத்து வீட்டின் மீது எறிய பொலிஸ் வந்து அவர்களை துரத்தியது.
இந்த விடயம் பின்னர், அதை கமல்ஹாசன் ஈழத்தமிழ் பேசுகிறேன் என தென்னாலியில் ஏதோ பேசி நடித்ததும், நாங்கள் இத்தனை பேர் பக்கத்தில் இருந்தும் முல்லிவாய்க்கால் அழிவை தடுக்க முடியவில்லையே என பேட்டி கொடுத்ததும் வேறு விடயங்கள்.