மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் ஏற்படுமோ என்ற அச்சத்தின் மத்தியில், ஏவுகணை மூலம் அமெரிக்க போர்க்கப்பல்களை மூழ்கடித்து, இராணுவ தளங்களை அழிப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிய தளபதி ஹொசைன் நெஜாத் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய உக்கிரமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகியதிலிருந்து இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான கட்டுப்பாடுகளுக்கான தடைகளை ஈரான் தளர்த்தியதை அடுத்து இரு தரப்பினரும் கடுமையான அச்சுறுத்தல்களைப் பரிமாறி வருகின்றனர்.
தளபதி நெஜாத் கூறியதாவது, அமெரிக்க தளங்கள் எங்கள் ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளன. தவறு செய்தால் அவற்றின் விமான தளங்களை எங்கள் ஏவுகணைகள் அழிக்கும். ஈரானுடனான இராணுவ மோதலின் விளைவுகளை அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள்.
வளைகுடாவில் இரத்தக் கடலை அமெரிக்கா எதிர்கொள்ளும் நேரும் என ஈரான் இராணுவ தளபதி ஹொசைன் நெஜாத் எச்சரித்துள்ளார்.