ஒரே பந்தில் ரத்தம் பீறிட்டு அடிக்க அடிக்க, அணிக்காக போராடி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்!

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

ஆனால் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடக்கம் அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி வெளியேறினார். வார்னர் 9 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த புதியதாக இந்த தொடரில் களமிறக்கப்பட்ட பீட்டர் ஹன்ஸ்காம்ப் வந்த வேகத்தில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாகக் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரே, ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரு பவுன்சரில் காயமடைந்த நிலையில், நிலை குலைந்து போனார். அவருக்குத் தாடை பகுதியில் அடித்து ஹெல்மெட் பறக்க, பறந்த ஹெல்மெட்டை ஸ்டிக்கில் விழாமல் காரே பிடித்ததால் ஹிட் விக்கெட் ஆகாமல் தப்பித்தார்.

பந்து பட்டதை அடுத்து உடனடியாக ஓய்வு அறையை நோக்கி உதவிக்கு அழைத்தார். வந்து பார்த்தபோது அவருக்கு தாடை பகுதி கிழிந்து ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து விளையாடி வரும் அவருக்கு ரத்தம் அதிகமாக கசிந்து, அவர் தாடைப் பகுதி முழுவதும் ரத்தமாக இருக்கிறது.

இருந்தபோதும் அவர் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். ஒருகட்டத்தில் ரத்தம் அதிகமாக வெளியேற வேறு வழியின்றி தற்போது தலை முழுவதும் பேண்டேஜ் சுற்றி விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்களில் 47 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.