பிக்பாஸின் மூன்றாவது சீசன் 15 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் துவங்கியது. பிறகு மீரா இணைய கடந்த வாரம் பாத்திமா பாபு எலிமினேட் ஆனார்.
இவரை போலவே இரண்டாவது சீசனில் முதல் ஆளாக வெளியேறியவர் மமதி. இவர் சமீபத்திய பேட்டியில் தற்போதைய போட்டியாளர்களை பற்றியும் தொகுத்து வழங்கும் கமலை பற்றியும் மிகவும் ஓப்பனாக பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அவர் கூறுகையில், கமல் நாம் பேசும் தமிழை தான் ஏளனம் செய்வார், ஆனால் அவரே வார்த்தைகளை தேடி தேடி தான் பேசுகிறார். அவர் செய்தால் தவறில்லை, நாம் செய்தால் தவறு என விமர்சித்துள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் காதல்கள் குறித்து பேசிய அவர், அங்கு நடப்பது காதல் அல்ல.. செக்ஸ் என காட்டமாக கூறியுள்ளார்.