சுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.