பிக் பாஸ் 3 வீட்டில் நடப்பதை பார்த்து பார்வையாளர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் சாக்ஷியுடன் ஒட்டி உறவாடினார். இந்நிலையில் பிக் பாஸ் சொல்லியதை அடுத்து சாக்ஷியை விட்டுவிட்டு லொஸ்லியாவுடன் நெருக்கம் காட்டுகிறார்.
கவின் லொஸ்லியாவுடன் நெருங்கிப் பழகுவது சாக்ஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
கவினும், லொஸ்லியாவும் சேர்ந்து சாப்பிட்டதை பார்த்து நீ கோபித்துக் கொண்டு பண்ண பிரச்சனையால் தான் இதெல்லாம் நடந்தது என்று இங்கு விவாதித்தார்கள் என்று வனிதா சாக்ஷியிடம் கூறும் ப்ரொமோ இன்று வெளியாகியுள்ளது.
அதை பார்த்த லாஸ்லியா நான் கதைக்க வேண்டும் என்று கூறி கடுப்பாகி வெளியே செல்ல கவின் பின்னாலேயே போகிறார்.
நீ இனிமேல் என்னோட கதைக்காத என்று கவினிடம் கூறி கண் கலங்குகிறார்.
கவின் நடந்து கொள்ளும் முறை சரியில்லை. நேரத்திற்கு ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி அவரை கழற்றிவிட்டு அடுத்த பெண்ணுடன் பழகுகிறார்.
கேமராவுக்கு முன்பே இப்படி என்றால் நிஜத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று கூறி கடும் கோவத்தில் நெட்டிசன்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.