ஜேர்மனியில் 18 வயதான யுவதியொருவரை, 12, 14 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படு த்தியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், குற்றங்களுக்குப் பொறுப்பாளியாகக் கூடிய ஆகக் குறைந்த வயது எல்லையை குறைக்க வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஜேர்மனியின் மேற்குப் பிராந்திய நகரான முல்ஹெய்மியி லுள்ள பூங்காவொன்றில், கடந்த வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவர்கள் பல்கேரியாவிலிருந்து ஜேர்மனியில் குடியேறியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட 18 வயதான யுவதியை பூங்காவுக்கு வரவழைத்த பின்னர், பற்றைகளுக்குள் இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதுடன், இக்குற்றச்செயலை படம்பிடித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
germany-park-3 ஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு!! ஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு!! germany park 3
நாய்கள் குரைக்கும் சத்தம்கேட்டு, தமது வீட்டிலிருந்து வெளியே வந்த 61 வயதான ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
ஜேர்மனியில் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடிய ஆகக் குறைந்த வயது 14 ஆகும்.
இந்த வயதை அடைந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு ஓர் இரவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏனைய இருவரும் 12 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனிய சட்டங்களின்படி, இச்சிறுவர்கள் இருவரையும் கைது செய்யவோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வழியில்லை.
14 வயதுக்குக் குறைந்தவர்களின் செயற்பாடுகளுக்கு அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், உள்ளூர் சிறுவர் நலன்புரிய நிலைய அலுவலகம் ஆகியனவே பொறுப்புக் கூற வேண்டும்.
குறித்த சிறார்கள் ஐவரும் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியில் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாகக் கூடிய ஆகக் குறைந்து வயது வரம்பை குறைப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.