சில வாரங்களுக்கு முன்னர் சாகசம் செய்து அதனை டிக் டாக் மூலம் பதிவு செய்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
இதனை அடுத்து தற்போது இவ்வாறான மற்றுமொரு சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்ஹா எனும் இளைஞனே தற்போது உயிரிழந்துள்ளார்.
தனது நண்பனான பிரசாந்த் என்பவருடன் இணைந்து டுலாபல்லி ஆற்றிற்கு அண்மையில் பாட்டு ஒன்றிற்கு நடனமாடி டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
முதலில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து நடனமாடியிருந்ததுடன் சிறிது நேரத்தில் நண்பர் பிரசாந்த் சிறிது தொலைவிலிருந்து நரசிம்ஹா நடனமாடுவதை டிக் டாக்கில் பதிவு செய்துகொண்டிருந்தார்.
இதன்போது நரசிம்ஹா வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார்.
நீச்சல் தெரியாத அவர் ஆற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த பொலிசார் நரசிம்ஹாவின் உடலை மீட்டெடுத்தனர்.