உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பை தொடரில் முதலில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இந்திய அணி அடுத்ததாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான தேர்வு வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தோனிக்கு இடம் கிடையாது என தெரிவிக்கின்றனர். இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்படுகிறார்கள்.
ஓய்வு அளிக்கப்பட்டு வீரர்கள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டியின் தோனியின் உலக கோப்பை பயணம் பயணம் முடிவுக்கு வந்த நிலையில் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று பலரும் கருதுகின்றனர். இதன் மூலம் தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.