சிறுமியிடம் தாய்க்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த நபர்… பின்னர் நடந்த சம்பவம்..!

சென்னையில் சிறுமியிடம் தாய்க்கு விபத்து ஏற்பட்டதாக கூறி கடத்த முயன்றவரை சிறுமி சாமர்தியமாக சிக்க வைத்துள்ளார்.

சென்னை புது வண்ணாரபேட்டை பகுதியில், துறைமுக குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்ல வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த வடமாநில இளைஞன் ஒருவன், சிறுமியிடம் அவரது தாய்க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றும் அழைத்துள்ளார்.

சிறுமி சுதாரித்துக்கொண்டு பள்ளிக்குள் சென்று ஆசிரியரை பார்த்து விவரத்தை தெரிவித்துள்ளார். வெளியில் வந்து பார்த்த ஆசிரியர் அப்போ அந்த இளைஞன் சாக்லேட் கொடுத்தவாறு வேறு ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளான்.

ஆசிரியர் அவனை விசாரிக்க முயன்றபோது தப்பியோட முயற்சித்துள்ளான். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவனை விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவன் பெயர் லிப்புதாஸ் என்பதும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தையை ஏமாற்றி கடத்த முயன்றதும், அலார்ட் ஆகிய சிறுமி செய்த நல்ல செயலே கடத்தலை தடுக்க முடிந்தது என்ற பொலிசார் தெரிவித்துள்ளனர்.