தனியார் மருத்துவமனையின் அரங்கேறிய கொடூரம்.!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை அந்தேரி பகுதியில் உள்ள லோகாண்ட்வாலா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிறிய அளவிலான மருத்துவமனை வைத்து நடத்தி வருபவரின் பெயர் சிம்பிள் அகர். இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் சருமத்திற்கு அழகூட்டுவது மற்றும் உடல் எடை குறைப்பு போன்ற மருத்துவ பணிகளை செய்து வந்துள்ளார்.

இவரது மருத்துவமனைக்கு பலர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில்., இவரது மருத்துவமனைக்கு உரோமம் சம்பந்தமான சிகிச்சைக்கு பெண் மாடல் ஒருவர் சென்றுள்ளார். இவரை மருத்துவர் ஆடைகளை களைய சொல்லி நிர்வாணமாக படுக்கையில் படுக்க வைத்துள்ளார். இதற்கு பின்னர் சிகிச்சை துவங்கிய சமயத்தில்., தலைக்கு மேலாக சிறிய கருவியில் சிறிய அளவிலான வெளிச்சம் வருவதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனை கண்டு சந்தேகமடைந்து கேள்வி கேட்ட சமயத்தில்., உரோமம் தீப்பிடித்தால் மெல்லிய அளவிலான புகையை கண்காணிக்கும் கருவி என்று கூறி சமாளிக்கவே., இதனை ஏற்றுக்கொள்ளாத பெண் தனது ஆடைகளை உடுத்திக்கொண்டு., அலைபேசியை வைத்து அந்த கருவியை சோதனை செய்துள்ளார். பின்னர் தனது இல்லத்திற்கு சென்று இது குறித்த சந்தேகத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., அன்று இரவு நேரத்தில் மருத்துவர் மீண்டும் அவருக்கு தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வந்து எதற்காக அலைபேசியில் புகைப்படம் எடுத்தாய்? இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காவல் துறையினர் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில்., மருத்துவமனையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அரை., கழிவறை போன்ற பல இடங்களில் இரகசிய காமிராக்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவன் என்ற பெயரில் பணியாற்றிய கொடூரனை கைது செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.