என்று தான் தீருமோ இந்த நாடக காதல். எத்துனை கொலைகள்., எத்துனை கொடுரங்கள் நாடக காதலால் அரங்கேற்றப்பட்டுள்ளது. தனது சுய விருப்பத்திற்காக காதலித்து., பிரச்சனை என்றவுடன் காதலியை கொலை செய்து., காதல் தப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை பகுதியை சார்ந்தவன் சுமர் சிங். இவனது காதலியின் பெயர் காஜல். இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்த நிலையில்., இவர்களின் காதலை இருவரும் தங்களின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்களின் காதலுக்கு காஜலின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து., மற்றொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த சமயத்தில்., கடந்த மாதத்தின் 10 ஆம் தேதியன்று சென்னை திருவெல்லிக்கேணி பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் காஜல் சயனைடு சாப்பிட்டு இறந்ததால் பிணமாக மீட்கப்பட்டார்.
இவருடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த சுமர் சிங் காவல் துறையினரால் மீட்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு., தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்., அவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காதலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., காதலன் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் மேற்கொண்ட கிடுக்குப்புடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுமட்டுமல்லாது பிரேத பரிசோதனை அறிக்கையில் காஜல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலனிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில்., காஜலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதன் காரணமாக இருவரும் தற்கொலை முடிவு செய்தோம். இந்த முடிவிற்கு நான் விருப்பவில்லை. காஜல் அடிக்கடி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததன் காரணமாக அவரை கொலை செய்ய நான் திட்டமிட்டேன். எனது திட்டப்படி இணையத்தின் மூலமாக சயனைடு ஆர்டர் செய்தேன்.
சயனைடு வந்தவுடன் அங்குள்ள தனியார் விடுதியில் இருவரும் அறையெடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்த பின்னர் தற்கொலை முடிவின் படி காஜல் சயனைடை சாப்பிட்டார். நான் சயனைடை விழுங்காமல் வெளியே துப்பினேன். காஜலும் என்னை போன்று துப்பிவிடலாம் என்றும் எண்ணி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.