பேனா கமெரா மூலம் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்..

குளியலறையில் பெண் குளிப்பதை பேனா கமெரா மூலம் ரகசியமாக வீடியோ எடுத்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை இயக்குநரான பச்சையப்பன் அண்மையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சியில் பணி செய்ய வந்திருந்தார்.

அப்போது திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார்.

அங்கு தங்கியிருந்த பச்சையப்பன் பேனா கமெராவால், அந்தப் பெண் அதிகாரி குளிப்பதை ரகசியாக வீடியோ எடுத்துள்ளார்.

மறுநாள் பேனா கமெரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் அதிகாரி அதை எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பச்சையப்பன் கைது செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெற்றன.

அதன் முடிவில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா பச்சையப்பனை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.