தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கம் செயற்பட முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது.
எனவே, இதனை ஐதேக – கூட்டமைப்பு அரசாங்கம் என்றே கூற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.