பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்ததையடுத்து அவரின் தொழிலை மனைவி நிறுத்திய நிலையில் அவருக்கு £5.4 மில்லியன் பணம் கிடைத்துள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் சர் புரூஸ் போஷித் (89).
இவர் இரண்டு முறை திருமணம் செய்த நிலையில் பின்னர் மூன்றாவதாக தன்னை விட 30 வயது குறைவான வில்னீலியா மெர்சேட் என்ற பெண்ணை மணந்தார். இவர் முன்னாள் உலக அழகி ஆவார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக புரூஸ் உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கும் போது மனைவிக்கு £11.5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை விட்டு சென்றுள்ளார்.
இதனிடையில் புரூஸ் செய்து வந்த தொழிலை கடந்த வாரம் அவர் மனைவி மெர்சேட் முழுவதுமாக நிறுத்தினார்.
இதையடுத்து அந்த தொழிலின் கருவூலத்தில் இருந்த £5.4 மில்லியன் பணம் மெர்சேட்டுக்கு தற்போது கிடைத்துள்ளது.
மெசேட் முன்னர் கூறுகையில், புரூஸின் இழப்பை சரிகட்டுவது பெரும் போராட்டமாக உள்ளது, எங்கள் இரண்டு வயது பேத்தி தாத்தா எப்போது வருவார் என கேட்டு கொண்டே இருக்கிறாள், அதை கேட்கும் போதெல்லாம் நான் அழுதுவிடுவேன் என கூறியுள்ளார்.