பிக்பாஸ் சீசன் 3-யில் இணையும் சர்ச்சை நாயகி.!

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.