நடைபெற்ற 2016 சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து சோதனைகளை அனுபவித்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, கட்சியினர் மத்தியில் கட்சி உடைந்து விட்டது. இனி அவ்வளவுதான் என்ற சோர்வும் கவலையும் மேலோங்கி காணப்படுகிறது.
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கட்சியை விரிவுபடுத்தும் பணிகளை தேமுதிக செய்ய முற்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக பேரூராட்சி நகராட்சி ஒன்றிய கிளை நிர்வாகிகளை கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் தமிழகம் முழுதும் தேமுதிகவை வலுப்படுத்த மற்றவர்களைவிட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையுடன் நிர்வாகிகளிடம் பிரேமலதா வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.