யாழ்ப்பாணம், வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தையிட்டிப் பகுதியில் இராணுவத்தினரால் கட்டடம் ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது விகாரையை ஒத்ததாக இருப்பதாக நேரில் பார்வையிட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணியை ஆக்கிரமித்து பிரமாண்டமான முறையில் அந்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வலி.வடக்கில் நேற்றுமுன்தினம் 27 ஏக்கர் காணி, இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளளிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் உடனேயே சென்று பார்வையிட்டனர்.
விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் ஆக்கரமிப்பில் உள்ள தனியார் காணி ஒன்றில் மிகப் பிரமாண்டமான முறையில் கட்டடம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அமைக்கும் கட்டடம் விகாரையை ஒத்ததாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் போருக்குப் பின்னர் நாவற்குழியில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றத்தில் கட்டப்பட்ட விகாரை நேற்றுத் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.