உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், கோப்பையை கைப்பற்றும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கொடுக்கப்படும் என்பதை ஐசிசி அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த இரு அணிகளுமே கோப்பையை வெல்லாததால், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
#EoinMorgan – “This is a culmination of 4️⃣ years of hard work, dedication, a lot of planning. We’re going to try and take it in.”#KaneWilliamson – “You take small steps forward and work as a group, and next thing you know, you might find yourself here.”#CWC19 FINAL preview ? pic.twitter.com/qYCMFlIlXz
— ICC (@ICC) July 14, 2019
இந்நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என்பதை சர்வதே கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது.
அதில், மொத்த பரிசுத் தொகை 68 கோடி ரூபாய் எனவும் இதில் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து 27 கோடியே 42 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் எனவும் அரையிறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு தலா 5.4 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கொடுக்கப்படவுள்ளது.
முதல் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு தலா 68 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.