உலகளவில் அசிங்கப்பட்ட திமுக.!

இணையதளத்தை பொறுத்தவரையில் தற்போதுள்ள அரசியல் காலகட்டத்தில் கடும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த இணையத்தில் உள்ள முகநூல்., ட்விட்டர் போன்ற செயலிகளில் பெரும்பாலனோர் தங்களின் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாங்கள் ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு அந்தந்த நபர்கள் ஆதரவான ட்விட்டுகளை பதிவு செய்வது வழக்கம்.

இந்த நிலையில்., சில சமயத்தில் தங்கள் ஆதரவு கட்சியை பற்றிய நல்ல எண்ணத்தை மக்களிடையே கொண்டு செல்ல பொய்யான தகவலை உண்மையாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக பதிவு செய்து., அதனை பிறருக்கு பகிர்ந்து வருகின்றனர். இந்த பொய்யான செய்திகள் குறித்த எந்த விதமான தகவலும் தெரியாத அந்த நபர்களும் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த செய்திகள் இணையத்தில் தொடர்ந்து உலா வந்து கொண்டு இருப்பதால்., ட்விட்டரை பொறுத்த வரையில் நாம் யாரை வேண்டும் என்றாலும் நமது பதிவில் இணைக்கும் (டேக்) வசதி உள்ளது. இதனை போன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்பு ஒருவர் ட்விட்டரில் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அவமானத்தையும் தமிழகத்திற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

“நான் வியந்த அரசியல் ஆளுமைகளின் தளபதியும் ஒருவர். தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார். அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து., அதனை இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்து இருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும். ஐநா முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஜான் எரியாசன் எழுதிய நான் வியந்த உலகத் தலைவர்கள் புத்தகத்தின் பக்கம் எண் 372” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை கண்ட ஐநா முன்னாள் துணைபொதுச்செயலாளர் இந்த செய்திகுறித்து பதிலளித்தது பெரும் விவாதமாகவே மாறிவிட்டது. மேலும்., இதனை போன்ற மாபெரும் அவமானம் தமிழகத்திற்கு ஏற்பட தமிழ் வாழ்க என்று கோஷமிட்ட திமுகவின் உடன் பிறப்புகளாலேயே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவிற்கு பதில் தெரிவித்து தனது ட்விட்டர் பதிவில் “முற்றிலும் இல்லை. இந்த நபரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. வெட்கக்கேடான தவறான தகவல்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கண்ட இணையதள நெட்டிசன்கள் மற்றும் பிற கட்சியினர் இது குறித்த செய்திகளை பிரதான ஊடகங்கள் பதிவு செய்யாதது ஏன்? என்ற கேள்வியை கடுமையாக எழுப்பி., தமிழக திமுக சார்பு பத்திரிகைக்கு எதிரான கோசங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.